தமிழ்நாடு போக்குவரத்து துறையில் நடக்கும் பித்தலாட்டம்...
ஒரு பக்கம் சென்னையில பேருந்து நிலையம் சென்னைக்கு வெளியே இருக்கு. அடுத்து என்னடான்னா ஓட்டுனர்களுக்கு ஊதிய உயர்வு இல்லை, போதுமான பஸ் வசதி இல்லை. அப்படி இருந்தாலும் பஸ்ல ஓட்டையா இருக்கு, படிக்கட்டு எல்லாம் உடைந்து விடுது. “ஒன்னா பஸ் இல்ல, பஸ் இருந்தா ஓட்டுநர் இல்ல, ரெண்டு இருந்தா அவங்களுக்கு ஊதியம் இல்ல, இது எல்லாமே இருந்தா பஸ் ஸ்டாண்ட் பக்கத்து ஊர்ல இருக்கு”. இதுக்கு எதுக்கு இந்த போக்குவரத்து துறை, அப்படி என்னதான் ஆச்சு இந்த துறைக்கு ஒதுக்கப்பட்ட காசுக்கு.
இப்படி இந்த ஒரு துறை மட்டுமல்ல நீங்க ஓசி ஓசி னு சொல்லி கொடுத்தது தான் இப்ப சாதாரண மக்களோட தலையில வரியாவோ இல்ல கட்டண உயர்வாகவோ வந்து நிக்குது.
என்னடா நலத்திட்டங்களுக்கு எதிர்ப்பா பேசுறாங்களே-னு பாக்கறீங்களா!
தேவைப்படுற நல திட்டங்கள் நல்லது தான். ஆனா இவங்க அரசியல் லாபத்துக்காக பண்ற நலத்திட்டத்துனால என்ன நடக்குது தெரியுமா? இதனால தான் நிதித்துறைக்கு பணம் இல்லாம போயி மக்களுக்கு சாதாரணமா பண்ணவேண்டிய திட்டங்கள் எல்லாம் செயல்படுத்த முடியல. அரசாங்கத்துக்கு பணமில்லாமல் அரசாங்க வேலை வாய்ப்புகளை முடக்கி, அதுக்காக தேர்வு எழுதிக் கொண்டிருக்கிற இளைஞர்கள் வாழ்க்கையை கேள்விக்குறியாக்கி, அந்தத் துறையில் பணியில் இருக்கிறவங்களுக்கு ஊதிய உயர்வு கொடுக்க முடியாமல் அவங்க குடும்பத்தை எல்லாம் கஷ்டப்படுத்தி, ஓட்டு அரசியல் நடத்தி தானும் தன் குடும்பமும் மட்டும் சம்பாதிக்கிற வேலைய பாக்குது திமுக அரசாங்கம். இத சொன்ன பி.டி.ஆர் அண்ணனைத்தான் முட்டாள் என்று சொல்லிட்டாங்க.
நீங்க நலத்திட்டங்கள் என்று குடுப்பீங்க இன்னொரு பக்கம் வரி கட்டணம்னு இத புடுங்கிப்பீங்க. இதுக்கு எதுக்குங்க உங்க அரசு நடக்கணும் பேசாம கலைச்சிட்டு புது அரசை கொண்டு வந்தரலாம்.
இன்னும் தூங்காதீங்க தமிழக மக்களே! இனியாவது முழிச்சுக்கோங்க!





Comments
Post a Comment