Posts

Showing posts from August, 2020

தமிழகம் (இன்னும்) முன்னேற என்ன செய்யப்பட வேண்டும்?

Image
  தமிழகம் (இன்னும்) முன்னேற என்ன செய்யப்பட வேண்டும்? தமிழகம் வளர்ந்ததா, வளரவில்லையா என்ற விவாதத்தை விட்டுவிட்டு, “வளர்ச்சிக்கு முடியவில்லை” என்ற போக்கோடு, தமிழகத்தை எவ்வாறு வளர்ச்சி பாதைக்கு மாற்றலாம் என்ற சிந்தனைகள் வரவேற்கத்தக்கது. "குறை சொன்னது போதும்பா, உருப்படியா சொல்லு!" One India Image கல்வி மாற்றம்: வேலை வாய்ப்பு பெருக தொழிற்கல்வி பள்ளிப்படிப்பில் இணைக்கப்பட வேண்டும். துறையை தேர்வு செய்வது மாணவர்களாக இருப்பது மட்டுமன்றி, இவையெல்லாம்தான் உனக்காக உலக பொருளாதாரம் வைத்துள்ள துறைகள் என்று, பள்ளியிலேயே அறிமுகப்படுத்த வேண்டும். "ஒரு விரலைக் காட்டி, இதில் எது வேணும்னு கேக்குற மாதிரி ஆயிர கூடாது" விகடன் டீம் - HASSIFKHAN K P M வெளிப்படைத்தன்மை: வெளிப்படை அரசாங்கம் மட்டுமல்லாது, வெளிப்படை அரசு அலுவலகங்கள் வேண்டும். இதுவே ஊழலற்ற ஆட்சிக்கு வழிவகுக்கும். "கண்டனம்" மட்டுமே தீர்வு என்றில்லாமல், பிற தண்டனைகளும் விரிவுபடுத்தப்பட வேண்டும். dhaka tribune தமிழ், கலாச்சாரம், பண்பாடு!  மொழிப்பற்றை அவசியமில்லாத இடங்களில் காட்டுவதை விட்டுவிட்டு, பள்ளிப் படிப்பிலும், உயர் ...

தமிழகம் தவறான திசையில் பயணிக்கிறது.

Image
  தமிழகம் தவறான திசையில் பயணிக்கிறது. வளர்ச்சி, விகிதத்தில் மட்டும் போதாது, மக்கள் முன்னேற்றத்திலும் மேம்பாட்டிலும் அமையவேண்டும். இதற்கு சிறந்த உதாரணமாக திகழ்கிறது தமிழ்நாடு. புள்ளிவிவரங்களில் வெற்றியை சுட்டிக்காட்டிய அமைப்புகள், தமிழக மனிதவள மேம்பாட்டில் உள்ள குறைகளையும் விமர்சிக்க தவறிவிட்டன. TN HDI Rankings கல்லூரிகளும் - வேலைவாய்ப்பும்: உயர்கல்விக்காக எண்ணற்ற தொழில்நுட்ப கல்லூரிகளை உருவாக்கிய அரசு, தொழில்நுட்ப கல்வி படித்த பட்டதாரிகளை வேலைக்கு அமர்த்த மறந்துவிட்டதா? அல்லது வேலை வாய்ப்பு இல்லை என்று தெரிந்தும், அரசியல்வாதிகள் மற்றும் தொழிலதிபர்களின் லாபத்திற்காக இந்த கல்லூரிகளை ஆரம்பிக்க உத்தரவிட்டதா? தெரியவில்லை. இது தவறு என்று தெரிந்தும் இதையே வேளாண் மற்றும் மருத்துவ படிப்புகளுக்கு தொடர்ந்து வருகிறது தமிழக அரசு. தொழில்நுட்ப பட்டதாரிகளை கூலி வேலைக்கு அமர்த்தியது போதாதென்று, தற்போது மருத்துவர்களையும், வேளாண் பட்டதாரிகளையும் அமர்த்த திட்டமிட்டுள்ளது போலும்.  DT Next அட்டு பழைய சித்தாந்தம்: சித்தாந்தங்கள் எதற்கு ஆரம்பிக்கப்பட்டன என்று ஆரம்பித்தவர்களே  மறந்துவிடக் கூடிய அ...

தமிழகம் சரியான திசையில் பயணிக்கிறது.

Image
  தமிழகம் சரியான திசையில் பயணிக்கிறது.  நீண்ட நெடும் வரலாற்றைக் கொண்ட தமிழகம் சிறந்த கலாச்சாரத்தையும் பல சிறந்த தலைவர்களையும் உள்ளடக்கியது. பிற மாநிலங்கள் தோல்வியுற்ற காலங்களிலும், தமிழகம் தேர்ச்சி அடைந்திருப்பதை வரலாற்றிலும் காணலாம், சமீபத்திய நிகழ்வுகளிலும் காணலாம். https://www.oneindia.com/ கல்வி: சிறந்த கல்வி கொள்கை, கல்வியறிவு விகிதம், பட்டப்படிப்பு மற்றும் உயர்கல்வி செல்வோரின் எண்ணிக்கை  அனைத்தும், பல மாநிலங்களை காட்டிலும் அதிகமா உள்ளது. மற்ற மாநிலத்தவரும் தொழில்நுட்ப கல்விக்காக நாடும் சிறந்த தொழில்நுட்ப கல்லூரிகள் தொடங்க, முக்கியத்துவம் காட்டியுள்ளது தமிழக அரசு. இவற்றிற்கு நமது அரசு மற்றும் தனியார் தொழில்நுட்ப கல்லூரிகளின் எண்ணிக்கையே சான்று. ஆங்கிலேயே கல்விக் கொள்கையை பின்பற்றிய நாடு தற்போது தமிழகத்தின் பாடத்திட்டங்களை கண்டு வியக்கிறது. Deccan chronicle | Mar 31, 2019 தொழில்துறை: தொழிற்பேட்டைகளின் மூலம் முதலீட்டாளர்களின்  ஈர்ப்பை வெகுவாக கவர்ந்துள்ளது தமிழகம். தொழிற்சாலைகளின் எண்ணிக்கையை உயர்த்துவது மட்டுமின்றி, இமாலய ஏற்றுமதியின் மூலம் அந்நிய செலவாணியை அதிகர...