தமிழகம் தவறான திசையில் பயணிக்கிறது.
தமிழகம் தவறான திசையில் பயணிக்கிறது.
வளர்ச்சி, விகிதத்தில் மட்டும் போதாது, மக்கள் முன்னேற்றத்திலும் மேம்பாட்டிலும் அமையவேண்டும். இதற்கு சிறந்த உதாரணமாக திகழ்கிறது தமிழ்நாடு. புள்ளிவிவரங்களில் வெற்றியை சுட்டிக்காட்டிய அமைப்புகள், தமிழக மனிதவள மேம்பாட்டில் உள்ள குறைகளையும் விமர்சிக்க தவறிவிட்டன.
| TN HDI Rankings |
கல்லூரிகளும் - வேலைவாய்ப்பும்:
உயர்கல்விக்காக எண்ணற்ற தொழில்நுட்ப கல்லூரிகளை உருவாக்கிய அரசு, தொழில்நுட்ப கல்வி படித்த பட்டதாரிகளை வேலைக்கு அமர்த்த மறந்துவிட்டதா? அல்லது வேலை வாய்ப்பு இல்லை என்று தெரிந்தும், அரசியல்வாதிகள் மற்றும் தொழிலதிபர்களின் லாபத்திற்காக இந்த கல்லூரிகளை ஆரம்பிக்க உத்தரவிட்டதா? தெரியவில்லை. இது தவறு என்று தெரிந்தும் இதையே வேளாண் மற்றும் மருத்துவ படிப்புகளுக்கு தொடர்ந்து வருகிறது தமிழக அரசு. தொழில்நுட்ப பட்டதாரிகளை கூலி வேலைக்கு அமர்த்தியது போதாதென்று, தற்போது மருத்துவர்களையும், வேளாண் பட்டதாரிகளையும் அமர்த்த திட்டமிட்டுள்ளது போலும்.
![]() |
| DT Next |
அட்டு பழைய சித்தாந்தம்:
சித்தாந்தங்கள் எதற்கு ஆரம்பிக்கப்பட்டன என்று ஆரம்பித்தவர்களே மறந்துவிடக் கூடிய அளவில் பல சித்தாந்தங்கள் இந்திய மண்ணில் உலவிக் கொண்டிருக்கின்றன. அவற்றில் சுவடை மறந்து நிற்கும் ஒரு "அட்டு பழைய சித்தாந்தத்தை" இன்னும் கொண்டுள்ளது நம்மை ஆளும் அரசியல் கட்சிகள். “அப்ப தேவைப்பட்டுச்சு பா, இப்ப எதுக்கு இது!”, என்று மக்களே புறக்கணிக்கும் சித்தாந்தம் தான் தமிழக மக்களை ஆள்கிறது. ஆள்கிறது என்பதை விட ஆட்கொண்டுள்ளது என்பதே பொருத்தம்.
| Industrial Economist |
ஓட்டு-வங்கி:
"எவன் எக்கேடு கெட்டால் என்ன, நான் நல்லா இருக்கணும், என் சாதி நல்லா இருக்கணும், என் இனம் நல்லா இருக்கணும்!", என்ற மக்களின் மேம் போக்கை, இடத்திற்கு ஏற்றாற்போல் பயன்படுத்திக்கொள்கிறது தமிழக அரசியலும், கட்சிகளும். "வாழத் தெரியாதவன் நாட்டுல ஆளத் தெரியாதவன் தான அரசனாய் இருப்பான்".
![]() |
| The New Indian Express |
இளைஞர்களும் - அரசியலும்:
இளைஞர்களின் அரசியல் ஆர்வம், பிறரை எதிர்ப்பதே என்றாகிவிட்டது. இதை மறைமுகமாக அரசியல் கட்சிகள் பயன்படுத்திதான் கொண்டுள்ளன. தான் எதிர்ப்பது இன்னொருவரின் லாபத்திற்காக என்று தெரியாமலே, எதிர்க்க மட்டும் வாய்ஸ் கொடுக்கின்றனர் தமிழக இளைஞர்கள்!

“இப்படியற்ற 100 இளைஞர்களை கொடு, நான் தமிழகத்திற்கு விடுதலை வாங்கித் தருவேன்” என்று கூற, விவேகானந்தர் "காவி உடையில்" பிறந்தால், அதுவும் குற்றமே!


தமிழ்நாட்டில் இப்போது தலைவர் வழிகாட்டுதல் இல்லை என்று எனக்கு தோன்றுகிறது. உங்களின் கருத்து
ReplyDeleteவழிகாட்டும் தலைவர்கள் அரசியலில் இல்லை என்பதே உண்மை
Delete